விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு!

 


ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதோடு ஆளுநர்களையும் நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு மேலதிக அமைச்சு பதவிகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆறு ஆளுநர்களை நியமிக்கவும் மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்களை பெயரிட ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.