படைப்பாளர் திரு. கிருஷ்ணசிக்கம் அவர்களின் பூங்கொத்து நூல் வெளியீடு!!!ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதுபெரும் படைப்பாளியான திரு.  கிருஷ்ணசிங்கம் நமசிவாயம் அவர்களின் 5வது சிறுகதைத் தொகுப்பான பூங்கொத்து  என்னும் சிறுகதை நூல் நோர்வே ஒஸ்லோ நகரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது, 


தனது 85 வயது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவர் இந்தப் படைப்பினை வெளியீடு செய்துள்ளார். முன்னைய காலங்களில் இவரது எழுத்தாக்கத்தில் வெளிவந்த "செவ்வரத்தம் பூ" சிறுகதை,   குறும்படமாக வெளியீடு கண்டது.  அன்றைய காலங்களில், இக்குறும்படம்  தமிழீழ வெளிநாட்டுப் பிரிவினரால்  வெளியீடு செய்யப்பட்டது. இதன் காட்சிகள், மக்கள் மத்தியில்  எழுச்சியையும், புரட்சி சிந்தனையும் அதிகமாக   ஏற்படுத்தியது எனலாம்.இவரது  பூங்கொத்து பனுவல் எமது தேசத்தின் அவலங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது.இவர் நடிகர், நாடக ஆசிரியர், சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.