மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி மரணம்!!

 


இந்தியா - தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் மர்மக் காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.


குறித்த சிறுமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.


இந்நிலையில், நள்ளிரவு மீண்டும் திடீரென காய்ச்சல் அதிகமான நிலையில் மீண்டும் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.


இதன்போது வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.