சடலமாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார்!

கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில்வசித்து வந்த பெண் ஒருவரின் சடலத்தை உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் , கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த  பாஸ்கரன் சற்குணதேவி வயது (52) என்ற 4 பிள்ளைகளின் தாயே  உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லையென அவரை தேடிப் பார்க்கும்படி வவுனியாவில் உள்ளவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று காலை பிரதேச கிராமசேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசாரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் அவரது  சடலத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 10 வருடங்களாக மலேஷியா நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மதாங்களாக வழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அத்துடன் தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாக சகோதரி தெரிவிக்கிறார்.

அதேவேளை  உயிரிழந்தவரின்   கணவர் யாழ்ப்பான பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மரணத்திற்கான காரணம் வெளியாகத நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.