சுயதொழில் திட்டம்!!

 


கனடா , சுவிஸ் , லண்டன், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் வசிக்கும் மட்டுவில் - கைதடி உறவுகளின் சுயாதீன கூட்டு நட்புறவான கராஜ் போய்ஸின் தாயகம் நோக்கிய 7 வது சுயதொழில் முயற்சி உதவித்திட்டமாக கைதடி மத்தியை சேரந்த,  4 அங்கத்தவர்களை கொண்ட,  பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு வீட்டில் வைத்தே கணினி தட்டச்சு உட்பட்ட கணினி அச்சிடல் சேவைகளை செய்யக்கூடியதாக  சக்தி பிறின்டேஸ் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு 18/2/23 சிவராத்திரி தினத்தன்று காலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் கைதடியைச் சேரந்ந பொது அமைப்புக்களின் தலைவர் , செயலாளர் , உறுப்பினர்கள் உட்பட  சமூக ஆர்வலர்கள்  பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்.

 கனடாவை சேரந்த கராஜ் போய்ஸ்  அங்கத்தவரான ஜெயதாஸின் அம்மாவும் சுவிஸை சேரந்ந ஜசிந்தன் சின்னத்துரையின் அம்மாவும் இணைந்து கணினி நிலையத்தைத் திறந்து வைத்து சிறப்பித்தனர். 


7வது செயற்திட்டத்தினை ஞாபகமூட்டுவதற்காக பயனாளியின் உறவுகள் 7 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  இங்கு போட்டோ கொப்பி , ரைப்பிங், வடிவமைப்பு,  அழைப்பிதழ்கள் அச்சிடல் என்பவற்றைக் குறைந்ந கட்டணத்தி்ல் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கு பற்றிய அனைவரும்  கராஜ் போய்ஸ் நன்பர்களைப் பாராட்டி உரையாற்றினார்கள் .

இவரகளது பணி மேலும் சிறக்க ஐவினஸ் இணையதளமும் வாழ்த்துகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.