யாழில் கலங்கி நின்ற பிரபல வில்லன் நடிகர்!!

 பிரபல தென்னிந்திய வில்லன் நடிகரான தீனா இலங்கை வந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.


இதன்போது, தமிழ் மக்களுக்காய் தன்னையே ஆகுதியாக்கிய தியாக செம்மல் திலீபன் நினைவிடத்திற்கு சென்றபோது கலங்கி நின்றதாக கூறியுள்ளார்.

அகிம்சை வழியில் போராடி தன் உயிரை நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு சென்றமை தனக்கு மகிழ்வளிக்கும் அதேசமயம் , தமிழ் மக்களையும் பாரம்பரியத்தையும் தான் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் தீனா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த போது தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கும் சென்றுள்ளார்.     

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.