வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்!!

 


நாட்டிலுள்ள குடிவரவுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை, ஒருநாள் சேவையின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.