வீட்டில் செல்வம் பெருக சிவராத்திரி நாளில் வாங்கவேண்டிய பொருட்கள்!!
மகா சிவராத்திரி ஆன இன்றைய தினம் சிவன் வழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் சிவபெருமானை வழிபட்ட பலனை பெற்றுவிடலாம் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக இன்று சனி பிரதோஷத்தோடு சேர்ந்து வரக்கூடிய மகா சிவராத்திரி. இந்த சிவராத்திரியை முடிந்தவரை யாரும் தவற விடாதீர்கள்.
சிவராத்திரி என்றாலே சிவனுக்கு உரியது. சிவனுக்கு உரியதான வில்வ இலையை வாங்கி உங்கள் கையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும்.
கருங்காலி மாலை, ருத்ராட்ச மாலை, ஸ்படிக மாலை இந்த மூன்று மாலைகளுமே இறை அம்சம் பொருந்தியது.
ஒவ்வொரு வீட்டிலும் கருங்காலியால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும்.
கருங்காலி
கருங்காலியால் செய்யப்பட்ட மாலை, கருங்காலியால் செய்யப்பட்ட பிரம்பு, அல்லது வேறு எந்த பொருள் கிடைத்தாலும் ஒரு கருங்காலி பொருளை வாங்கி வீட்டில் வைப்பது மிக மிக சிறப்பு.
கருங்காலியால் செய்யப்பட்ட பொருள் வீட்டில் இருந்தால் கண் திருஷ்டி நெருங்காது. கெட்ட சக்தியால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. வீட்டில் நேர்மறை ஆற்றலும், இறை சக்தியும் நிறைவாக இருக்கும்.
திருநீறு
அடுத்ததாக சொல்லப்பட்டுள்ள பொருள் ருத்ராட்சம்.ருத்ராட்சத்தோடு சேர்த்து திருநீறும் வாங்கிக் கொள்ளுங்கள்.
ருத்ராட்சம்
இன்றைய தினம் ருத்ராட்சம் வாங்கி அணிந்து கொண்டால் சிவனின் அருளும் ஆசீர்வாதமும் முழுமையாக பெற்று விட்டதாகவே அர்த்தம்.
தினமும் நெற்றியில் திருநீரு அணிவதால் சிவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்படிக மாலை
மனதை அமைதிபடுத்தவும், உடலை குளிர்ச்சி ஆக்கவும் இந்த ஸ்படிக மாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் ஸ்படிக மாலை கையில் வைத்துக்கொண்டு நீங்கள் எந்த மந்திர ஜபத்தை உச்சரித்தாலும் அந்த மந்திரம் உடனே சித்தியாகும் என்பது நம்பிக்கை.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை