இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து வெளியான தகவல்!!


புத்தல – வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு அருகில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.


அதன்படி, சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அதிர்வு உணரப்பட்டதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


இன்று மதியம் 12.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


நாட்டில் அமைந்துள்ள நான்கு நிலநடுக்க மையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், நிலநடுக்கம் தொடர்பாக மேலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இது இலங்கையில் ஏற்பட்ட அதிர்வு என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.