துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் ரொனால்டோ!!

 


துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவுவதற்காக நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கையொப்பமிட்ட ஜேர்ஸியை ஏலத்திற்கு விடுத்துள்ளார்.


அதிலிருந்து கிடைக்கும் பணத்தை  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக  வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


இவ்வாறான நிலையில், உலக நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் சிரியாவுக்கு  உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.