உலக வரை தள்ளிப்போன துருக்கி!!
துருக்கி ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், சிரியாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தையும் கடந்து உள்ளது. எனினும் உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 30 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கி நிலநடுக்கம் காரணமாக கிட்டத்தட்ட 100 கிமீ தூரத்திற்கு பால்ட் லைன் பாதிப்பு இதனால் ஏற்பட்டு உள்ளது. பூமியின் நிலநடுக்கங்கள் ஒன்றாக இல்லாமல் திடீரென நகர்ந்து செல்வதுதான் நிலநடுக்கம்.
பூமி அடுக்குகளில் திடீர் நகர்தல்தான் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இந்த துருக்கி நிலநடுக்கத்தில் அரேபியன் பிளேட் அன்டோலியன் பிளேட் மீது நகர்ந்து உள்ளது. ஒரு முறை பிளேட் நகர்ந்தால் அதற்கு மேலே இருக்கும் பிளேட்களும் நகரும் சூழ்நிலை ஏற்படும். இது கிட்டத்தட்ட சங்கிலி விளைவு போல சில நொடிகள் ஏற்படும். இதன்பின் இந்த நிலநடுக்கம் முடிந்தும் சிறிய அளவிலான நகர்வுகள் இருக்கும்.
இதை ஆப்டர் எபக்ட் என்றும் கூறுவார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த நிலையில் நிலநடுக்கம் காரணமாக உலக மேப்பில் மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
கருத்துகள் இல்லை