உயிருக்காகப் போராடிய மனைவியை மீட்க கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

 


சீனாவில் ஆடவர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவி உயிருக்காகப் போராடிய நிலையில்  பிரிந்த கணவர், மீண்டும்  மறுமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி ரத்த சோகையால் உயிருக்குப் போராடியது அவருக்குத் தெரியவந்தது. எனினும் தமது காதலும் கடப்பாடும் அவரைக் காப்பாற்றும் என்று நம்பினார் முன்னாள் கணவர்.

மறுமணம் செய்த பின்னர், அவரது மனைவி அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் , தற்போது மனைவியின் உயிருக்கு ஆபத்து இல்லை என  அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரிந்த பின் தம்பதி மீண்டும் திருமணம் செய்த  காணொளியை மில்லியன் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.