அகழ்ந்தெறிந்து அமைப்போம் எங்களின் ஐயனார் உருவச்சிலை!


முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையைமீறி ஈழத்தமிழரது தொன்மையான ஐயனார் கோவிலை அழித்து பாரிய பௌத்தவிகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பிலான நீதிமன்ற கட்டளைகளேபோதும் இலங்கையில் சட்டமும் நீதியும் எவ்விதமானது என்பதனை அறிந்துகொள்ள! பலகாலம் இராணுவ முற்றுகைக்குள் இருந்த குருந்தூர்மலையில் தமிழர்களே இடம்பெறாத சிங்களவர்களை கொண்ட குழுவினால் அகழ்வாராட்சி நடத்தப்படுகிறது. தமிழர்களை இணைக்க நீதிமன்று கட்டளை இடுகிறது கட்டளை காற்றில் பறக்க சிங்களவரே தொடர்ந்து அகழ்ந்து ஓர் கல்லை காட்டுகின்றனர். அதனை தமிழர்கள் எட்டுமுக லிங்கம் என்றனர். சிங்களவரோ விகாரையின் கலசம் என்றனர். ஆயினும் தமிழ்தரப்பை அதனுள் அனுமதிக்காமலே பணிகள் தொடர்ந்தமை ஆக்கிரமிப்பு காலத்தில் கொண்டுவந்து புதைக்கப்பட்டதாக க்கூட இது இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் பலமாகவே தோற்றுவிக்கிறது. (காரணம் அங்கு கட்டப்பட்டுள்ள விகாரை புராதனவிகாரைபோன்று தோற்றம்காட்டும் பாவனையில் செங்கற்களை காலநிலைகளால் சிதைந்தமைபோன்ற தோற்றத்திலேயே அமைத்துள்ளனர்) தொல்பொருட்களுள்ள இடத்தில் எதுவித கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாதென்பது பொதுவான சட்டமாயிருக்க அங்கே இராணுவ பாதுகாப்புடன் விகாரைகட்டும்பணி தொடங்குகிறது. தமிழ்மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்க்கின்றனர். நீதிமன்றும் விகாரை கட்டக்கூடாதென கட்டளையிடுகிறது. சிங்களத்திற்கு நீதிமன்றம் கட்டளையிடமுடியுமாவென்று கட்டளையை காடாசிவிட்டு விகாரை கட்டப்பட்டு அரைவாசி பணிகள்வரை விரைவாக முடிக்கப்பட, மீண்டும் மக்கள்போராட்டம் நீதிமன்று விகாரையை அகற்ற கட்டளையிடுகிறது. இங்குதான் சிங்களத்தின் உண்மைமுகமும் சிரிலங்காவில் நீதியின்நிலையும்  அம்பலமாகியது மீண்டும். நீதிபதி மிரட்டப்பட்டாரோ அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதோ தெரியாது, முன்னர் வளங்கிய கட்டளையை நிறைவேற்றினால் தொல்பொருட்சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற விசித்திர காரணம்கூறப்பட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட விகாரையை மேலும் கட்டும் பணிகளை தொடராது அவ்வாறே இருக்க வேண்டுமென திருத்திய கட்டளையை ஆக்குகிறது நீதிமன்றம். இவ்வாறான நகைச்சுவை தீர்ப்புகளை சிரிலங்காபோன்ற காட்டுமிராண்டிகள் அதிகாரம் செலுத்தும் நாடுகளில்தான் காணலாம் என்பது எவருக்கும் புரியும்.  


அவ்வாறே பேணப்பட நீதிமன்று நகைச்சுவை தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதை நகைச்சுவையாகவே எடுத்துகொண்ட சிங்களம் தற்போது விகாரையை முழுதுமாக இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் கட்டி முடித்துள்ளது (பதிவில் நீதி கேலிக்குரியதாக்கப்பட்டிருப்பதை சுட்டுவதே நோக்கமே தவிர மேன்மைகொள் நீதியை விமர்சிப்பது நோக்கமன்று. நீதி கேலியாக்கப்படுவதை சுட்டும் உரிமை ஒவ்வொருவருக்கும் நிட்சயம் உண்டு) இனி இது இவ்வாறே இருக்கும் என்பது சிரிலங்காவை சிங்களத்தை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 


இனி விடயத்திற்கு வருவோம். இந்த இனம் எத்தகைய இடர்வந்தாலும் எத்தனை கோடரிக்காம்புகள் முளைத்தாலும் அவற்றை எதிர்கொண்டு என்றோ ஒருநாள் நிட்சயம் விடியலை சந்தித்தே தீரும் என்ற நம்பிக்கையோடு பயணப்படும் நாம், எமக்குள் உறுதி கொள்வோம்! எம் தேசம் விடியும்போது இந்துமகா சமுத்திரத்தில் இருந்து நோக்கும்போது பௌத்தவிகாரையின் கலசமே தெரிய வேண்டுமெனும் ஆதிக்கவெறியில் கட்டப்பட்ட விகாரையை அகழ்ந்தெறிந்து, பெரும் மேடைத்தளம் அமைத்து அதன்மீது பிரமாண்டமாய் கம்பீரமாய், மணலாறின் மைந்தனும் தலைவனின் போர்முகமுமான “எங்கள்காலத்தில் எங்கள்முன் எங்களுக்காகவே வாழ்ந்த #எங்களின்_ஐயனார்” பால்ராஜின் உருவச்சிலையை உறுதியாய் அமைபோம் என்று உறுதிகொள்வோம். எந்த இந்துசமுத்திரத்தில் இருந்துநோக்க பௌத்த கலசம் தெரியவேண்டுமென சிங்களம் எண்ணுகிறதோ அங்கிருந்து நோக்க “எங்களின் ஐயனார்  பால்ராஜ் தெரிவார்”. பார்த்திரு சிங்களமே! 


அதுவரையில் ஆடுராமா ஆடு!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.