பெண்கள் செய்ய வேண்டியவை!


ஒரு வீட்டில் கஷ்டங்கள் வரலாம், போலாம். ஆனால் சிக்கலான சூழ்நிலையில் குடும்பத்தில் இருப்பவர்கள் என்றுமே சிக்கிக் கொள்ள கூடாது.


அதற்கு  வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?


கடவுள் என்பவன் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிர் தான் கடவுள்.


ஆகவே வீட்டில் இருக்கும் பெண்களாக இருக்கட்டும், ஆண்களாக இருக்கட்டும் முதலில்



நேசிக்க வேண்டிய விஷயம், உயிர். ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதியுங்கள். யாரையும் அலட்சியமாக எண்ணாதீர்கள்.

அடுத்தவர்களை பற்றி பின்னால் வசை பாடாதீர்கள். எல்லா உயிர்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.


உணவு இல்லாதவர்களுக்கு, ஆடை இல்லாதவர்களுக்கு, இருக்க இடம் இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு நீங்கள் செய்யும் சேவை அந்த கடவுளுக்கே செய்யக்கூடிய சேவை.

சில வீட்டில் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து அப்படியே முடியை கொண்டை கட்டிக்கொண்டு வேலையை செய்ய தொடங்கி விடுவார்கள்.


மாலையும் தலை சீவாமல் அப்படியே மீண்டும் அந்த கொண்டையை கழட்டி சிக்கு எடுக்காமல் ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக் கொள்வார்கள். இந்த தவறை செய்யவே கூடாது.



   ஏனெனொல் உங்கள் தலைமுடி எவ்வளவுக்கு எவ்வளவு சிக்கலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு குடும்பத்தில் சிக்கல் இருக்கும். தினம் தினம் காலையில் ஒரு வேலை, மாலையில் ஒரு வேலை தலையில் இருக்கும் சிக்கை எடுத்து தலையை சீவி கட்டிக் கொள்ள வேண்டும்.

தலைவிரி கோலத்தோடு வீட்டில் இருக்க வேண்டாம். எப்போதும் தூங்கி வழிந்த முகத்தோடு முகத்தில் கலை இல்லாமல் இருக்கக் கூடாது.


வீட்டில் இருக்கும் பெண்களாகவே இருந்தாலும் சரி, தலை சீவி முகம் கழுவி பொட்டு இட்டுக்கொண்டு பார்ப்பதற்கு மகாலட்சுமி அம்சத்தோடு முகத்தில் புன்னகையோடு தான் இருக்க வேண்டும்.


கையில் போடக்கூடிய வளையல் பிளாஸ்டிக் வளையலை அணிய வேண்டாம். இரும்பு வெள்ளியிலும் வளையல் அணியக்கூடாது.


தங்க வளையல் போடலாம். கூடுமானவரை ஒரு வளையல் போடுவதை தவிர்த்து விட்டு, இரண்டு வளையல்களை கையில் போட்டுக்கொள்ள வேண்டும்.


இந்த அறிவைப் பெற்றவர்களை கடவுளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரு பெண் அடுத்தவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.


என்னதான் நாம் நல்லது செய்தாலும் வீட்டில் இருக்கக் கூடிய பெண்கள் ஒரு சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றி தான் ஆக வேண்டும்.


அந்த வரிசையில் முதல் விஷயமாக தலைமுடி எப்போதும் பெண்கள் தலையில் சிக்கோடு இருக்கக் கூடாது. எப்போதும் தலைசீவி அழகாக இருக்க வேண்டும்.


இரண்டு வளையலுக்கு மேல் எத்தனை வளையல்கள் போட்டாலும் அது நல்லது தான். இந்த சத்தத்தின் ஒலியில் இறைவன் உங்களுடைய வீட்டில் இருப்பான். அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்கக் கூடாது,


குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ  பெண்கள் அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்கவே கூடாது.


உங்களை பார்த்து, உங்களுடைய குடும்பமே உங்களை பின்பற்ற தொடங்கி விடும். உங்களை பார்த்து ஒருவர் பின்பற்றினால் கூட, நீங்கள் இறைவனுக்கு சொந்தக்காரராக மாறிவிடுவீர்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.