நிஜ வாழ்வில் இணையும் பிரபல சீரியல் ஜோடி!!

 


பிரபல தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான தவமாய் தவமிருந்து சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் பிரிட்டோவும் நடிகை சந்தியா ராமச்சந்திரனும் நடித்திருந்தனர்.


மேலும், பிரிட்டோ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜா ராணி 2வது சீசனில் நடித்து வருகிறார். இணைந்து நடித்ததில் இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தாரின் சம்மதத்தோடு தற்போது விரைவில் திருமணம் செய்துக்கொள்ள உள்ளனர்.


இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.