சாதனை வீரர் மதிப்புக்குரிய திரு.எதிர்வீரசிங்கம் அவர்கள் வடக்கிற்கு வருகை!!


இலங்கையில் 1952, 1956 ம் ஆண்டுகளில் உயரம் பாய்தல் நிகழ்வில்  ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மதிப்புக்குரிய வீரர் திரு. எதிர்வீரசிங்கம் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார்.

இவர், 1958 ம் ஆண்டு ஆசிய  உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்றவர்.

 கிளிநொச்சி ஐக்கிய விளையாட்டு கழக அனுசரணையில் பல்வேறு விளையாட்டுக்களை ஊக்குவிப்பது இவரது வருகையின் முக்கிய நோக்கமாக உள்ளது. 

குறிப்பாக எதிர்வரும் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மைதானத்தில் மாலை நேரங்களில் உயரம் பாய்தல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளிற்கான ஆலோசனைகளை இவர் வழங்குவார். 

மேலும்,  யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவரான கலாநிதி எதிர்வீர சிங்கம் அவர்கள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ள "வடக்கின் பெரும் போர்" என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் பரி யோவான் கல்லூி ஆகியவற்றுக்கிடையிலான பாரம்பரிய துடுப்பாட்ட போட்டியையும் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.