இலங்கையின் சில பிரதேசங்களுக்கு எச்சரிக்கை!!

 .


அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் படி யாழ்ப்பாணம், குருநாகல், கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய நகரங்களில் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. 

 இந்த நகரங்களில் உள்ள நுண் துகள்களின் அளவு நேற்று (28) காலை 101 முதல் 150 வரை இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது உணர்திறன் உள்ளவர்களுக்கு சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் காற்றின் மாசு அளவு நாளை (01) சிறிதளவு குறையக்கூடும் என்றும்   அடுத்த சில நாட்களில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் மக்கள் அவமனமாக இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.