தமிழர் நிலங்களில் வலுக்கட்டாயமாக புத்தர் சிலைகளை வைக்கின்றனர்


 தமிழருடைய நிலங்களில் வலுக்கட்டாயமாக புத்தர் சிலைகளை வைக்கின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் மிக நீண்டகால யுத்தத்தை சந்தித்தவர்கள், அவர்களின் நிலங்கள் இன்றும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை புத்த விகாரை என பறிக்க முயற்சிக்கின்றார்கள். நாவற்குழியில் சிங்கள மக்கள் ஒருவரைகூட காண கிடைக்காது ஆனால் தற்போது அங்கு ஒரு விகாரையை அமைத்து கடந்த வாரம் சவேந்திர சில்வா வருகை தந்து கோபுரம் வைக்கின்றார்.

அதேவேளை மயிலிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து விகாரைகளை அமைக்கின்றனர்.

தமிழருடைய பகுதிகளான வெடுக்குநாரி மலை, குருந்தூர்மலை, உருத்திரபுரம் சிவன் கோவில், நிலாவரை நல்ல தண்ணி கிணறு போன்ற இடங்களில் வலுக்கட்டாயமாக புத்தர் சென்று அமருகின்றார்.

அந்த நிலங்கள் பறிக்கப்படுகின்றது. தொல்லியல் திணைக்களத்தினூடாக மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.