இலங்கைக்கு கடன் வசதியளிக்க ஐஎம்எப் அனுமதி வழங்கியது!


 இலங்கைக்கு நீடித்த நிதி வசதியின் கீழ் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அனுமதியினூடாக 07 பில்லியன் அமெரிக்க டொலர் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான தூதரகத் தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தற்போது இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (EFF) பற்றிய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றனர்.

இதற்கமைய இலங்கைக்கு 333 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.