பூவுலகில் உனக்கொரு சிலை வடிக்கவா..?

 


என் நினைவலையில்

தோரணங்கள்

மாலையோடு ஆடுதங்கே 


சூழ்ந்திருக்கும் இருளகற்றி

என் மனதில் சங்கமித்த

தமிழ்த்தாயின் நேசனுக்கு

நீ மலர்ந்த நன்நாளில்

தீபம் ஒன்று ஏற்றி நானும்

கானம் ஒன்று பாடுகிறேன் 


கலைந்து போகா 

நினைவுகளோடு

பொங்கும் பூம்புனலாய்

அழிந்து போகாமல்

பவனி வருகிறது 

நெஞ்சத்துக் காயங்கள் 


கருமேகக் கண்ணனே

நீலத்தை பூசிக்கொண்ட

கடலலையின் நுரைகளிலே

கோபுரமாய் வீடமைத்து

பார்ப்பவர்கள் அதிசயிக்க

பூவுலகில் உனக்கொரு

சிலை வடிக்கவா..?


நீரோட்டம் போல் ஓடுகிறது

பழைய சோகங்கள்

வலிகள் மறந்திட அழுத காயங்கள்

தடங்களாகுதே 


உதயகாலைப் பொழுதினிலே

உன்னை நானும் தேடுகிறேன்

தந்தியில்லா வீணை சுரம் தருமா..? 


தேடலோடு நானும்

நினைவுகளாய் என்றும்

நீயும்..... 


-பிரபாஅன்பு-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.