மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் நினைவேந்தல்!

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை வடமராட்சி, கரவெட்டி தெற்கு,மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

 பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றி தொடர்ந்து அவரது திரு உருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008ம் ஆண்டு இதே நாளில்,  மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.