நெய்தல் கடற்கரை நகரில் “சுகதேகம்”!!

 


நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரில் “சுகதேகம்” என்ற பெயரில் சித்த மருத்துவத்தின் ஊடான இணைந்த மருத்துவ சேவை நிலையம் ஒன்று விரைவில் கட்டியெழுப்பப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்றது. 


இதனை உருவாக்குதலில் இருவா் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றாா்கள். ஒருவா் நெய்தல் கடற்கரை நகரை உருவாக்கிய சிவராஜா அனுராஜ். இதற்குத் தேவையான காணியை அவா் இலவசமாக  கொடுத்திருக்கின்றாா். மற்றவா் அவுஸ்திரேலியாவில் மெல்போ்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நித்தி கனகரட்ணம். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலாவது விவசாய பீடத் தலைவராக கடமையாற்றி, பின்னா் புலம் பெயா்ந்தவா்தான் நித்தி கனகரட்ணம். இந்த மருத்துவமனையை அமைப்பதற்கான நிதிப்பங்களிப்பை அவா் வழங்குகின்றாா்.  


“பொப் இசையின் தந்தை” என்றுதான் நித்தி தமிழ் உலகில் சில தசாப்த காலத்துக்கு முன்னா் அறிமுகமானவா். “சின்ன மாமியே..”, “கள்ளுக் கடைப்பக்கம் போகாதே..” என்பன அவரது புகழைக்கூறும் பாடல்கள். எம்.ஜி.ஆா். தமிழகத்தில் மது ஒழிப்பைக் கொண்டுவந்த போது நித்தியின் இந்தப் பாடல்தான் அதற்கான பிரச்சாரப் பாடலாக இருந்தது. 


நித்தியின் பல பரிமாணங்களில் ஒன்றுதான் சித்த மருத்துவம். தாயகத்தில் தரமான முறையில் சித்த மருத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற அவரது கனவுதான் நெய்தல் நகரில் நனவாகப்போகின்றது. இதனை சில மாதங்களிலேயே கட்டிமுடித்து, எதிா்வரும் ஓகஸ்ட் மாதத்தில் இதனைத் திறந்துவைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. 


இந்த மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் தரமான சித்த மருத்துவ சேவை எம்மவா்களுக்கு கிடைக்கப்போகின்றது என்பது முதலாவது. 


எமது புலம்பெயா்ந்த சமூகத்தினா் கேரளா சென்று பெறக்கூடிய சிகிச்சையை யாழ்ப்பாணத்திலேயே வழங்கினால் - அதன் மூலமாக கணிசமான அந்தியச் செலாவணி கிடைக்கும் என்பது இரண்டாது விடயம். 


பலருக்கு இதன் மூலமாக வேலை வாய்ப்பும் கிடைக்கும். 


மூலிகைப் பண்ணை ஒன்றும் தங்கிச் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ மனை ஒன்றும் கூட இதன் அடுத்த கட்டமாக உருவாக்கப்படவிருக்கின்றது.


வடக்கில் அங்காங்கே கவனிப்பாரற்றுக் கிடக்கும் மூலிகைச் செடிகளுக்கும் கிராக்கி ஏற்படப்போகின்றது. 


நேற்றைய நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபா், யாழ். பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதி உட்பட பல மருத்துவா்கள், மதத் தலைவா்கள் கலந்துகொண்டிருந்தனா்.


இன்றைய காலத்தில் எமக்கு அவசியமான ஒன்றை நித்தியும், அனுராஜூம் இணைந்து ஆரம்பிக்கின்றாா்கள். அவா்களது கனவு நனவாக வாழ்த்துவோம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.