வவுனியாவில் மற்றுமொரு துயரச் சம்பவம்!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3 ஏ எடுத்து மருத்துவபீடத்துக்கு தெரிவாகிய மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
மாணவனின் தந்தை பிரபல வைத்தியர் எனவும் கூறப்படுகின்றது. அதேவெளை உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின் பின்னர் மாணவனின் தாயார், தனது மகன் வருங்காலத்தில் இருதயசிகிச்சை நிபுணராக வரவிரும்புவதாக கூறியிருந்தார்.
அத்துடன் உயிரிழந்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று தேசிய ரீதியில் 39வது இடத்தையும் பெற்றவராவார்.
இந்நிலையில் மாணவரின் தற்கொலை செய்ததற்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை