சாரதிகளுக்கான அறிவிப்பு!!


 தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை 18 வளைவு வீதியின் ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாறைகளும் மண்ணும் வீதியில் விழுந்து வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் வீதியை மூடுவதற்கு அதிகாரிகள் நேற்று (04) தீர்மானித்திருந்தனர்.


இந்நிலையில் வீதியில் இடிந்து விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடியவகையில் வீதியின் ஒரு வழி மாத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வீதியின் இருபுறங்களிலும் எஞ்சியுள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.