உயர்தர செயல்முறை பரீட்சைத் திகதி அறிவிப்பு!!

 


2022 க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான செயல்முறை பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 06 ஆம் திகதி வரை நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீட்சை நிலையம் குறித்து விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 உயர்தரப் பரீட்சையினை எழுதிய பரீட்சார்த்திகள் மாத்திரம் செயல்முறை பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி உயர்தரப் பரீட்சையினை எழுதாத பரீட்சார்த்திகள், செயல்முறை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன.


பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரரின் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


அத்துடன் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk இல் பிரவேசிப்பதன் மூலம் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.