ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு: பலர் பலி!

 


ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில்  மத விடயங்களுடன் தொடர்புடைய கட்டிடமொன்றுக்குள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது.

அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.