மதுக்கடையில் மாணவிகள்- பரவும் புகைப்படம்!!

 


மாணவிகள் சிலர் மதுக்கடையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் நிற்கும் மாணவிகள் அங்கு சென்ற காரணம் குறித்து எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.

பணத்தை மாற்றிக்கொள்வதற்காக சென்றிருக்கலாம் எனச் சிலர் கூறி வரும் நிலையில் பணத்தை மாற்ற ஏனைய கடைகளுக்கு மாணவிகள் செல்வார்களே தவிர இவ்வாறான இடத்திற்க்குச் செல்வதற்கு வாய்ப்​பே இல்லையென இன்னுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.

அந்த மாவட்டத்தில் மதுபான பாவனை பெருகி வருவதாகவும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்வதாக மாணவர்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் பெற்றோர் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் கவனம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.