புலம்பெயர் சகோதரியின் உதவி!!

 


புலம்பெயர்ந்து சுவிசில் வசித்துவரும் சகோதரி வசந்தி சிவா அவர்களது அன்பு மகள் மேனகா நிரோசன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு முன்னாள் போராளி ஒருவரிற்கு சுயதொழிலுக்கு உதவியுள்ளார்கள். 


யுத்தத்திற்குள் வாழ்ந்து காயங்களோடு பெற்றோரும் இன்றி தனித்து வாழ்ந்துவரும் சகோதரி ஒருவருக்கு  சுயதொழில் வாய்ப்பாக ஆடுகள் இரண்டினை வழங்கி வைத்துள்ளார்கள் மேனகாவின் பெற்றோர். 


அத்தோடு இச்சகோதரி வசிப்பதற்கு காணியோ வதிவிடமோ இல்லாத நிலையில் இவரின் தற்போதைய நிலைமையினைக் கருத்தில் கொண்டு  இருப்பிடத்திற்கான ஒரு இடத்தினை பெற்றுக்கொள்வதற்கும் தம்மாலான ஒழுங்குகளைச்  செய்துள்ளார்கள். 

இவர்களின் முன்மாதிரியான செயற்பாடுகளை பலரும் பாராட்டியுள்ளார்.  கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.