இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!

 


இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை கொண்டது.

H3N2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.


மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.