யாழ்ப்பாணம் - இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு!!
இந்தியாவின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி . கவிதா ஜவகர் தலைமையில் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் 14. 03. 2023 அன்று மாலை. 5.00 மணிக்கு பட்டிமன்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கா? சமூகத்திற்கா? என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
செந்தமிழ் சொல்லருவி ச. லலீசன் மற்றும் திருமதி. மதன் கோசலை இருவரும் பொறுப்பு பெற்றோருக்கானது எனவும்
திரு. ந. விஜயசுந்தரம் , செல்வி. தயாழினி குமாரசாமி ஆகியோர் பொறுப்பு சமூகத்திற்கானது எனவும் வாதிடவுள்ளனர்.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை