”நாமல் அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் கோழி”: வீரவன்ச!
நாமல் ராஜபக்ஷ எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் துன்பப்படும் வேளையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாமல் ராஜபக்ச ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி இதுவரை எதையும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறினார்.
அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார் என்றும் காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி என்றும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.
நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த விடயங்களே காரணமாகும் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை