பெண் அரச உத்தியோகஸ்தருக்கு ஏற்பட்ட சிக்கல்!

 


பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின்loop நிர்வாணப்படங்களை, அவரது கணவரின் கைத்தொலைபேசிக்கு அனுப்புவதாக மிரட்டி  பெரும்தொகை பெற்ற சம்பவம் ஒன்று  திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில்  இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அரச உத்தியோகஸ்தரிடமிருந்து பல்வேறு கட்டங்களில் 26 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான பணத்தை பெற்ற சந்தேகநபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

முறைப்பாட்டாளரான அரச உத்தியோகத்தர், குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் முறைசாரா உறவைப் பேணி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்போது, அந்த அரச உத்தியோகத்தரின் நிர்வாண புகைப்படங்களை சந்தேக நபர் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.


கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து, சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில், பணத்தொகையை அவர் வழங்கிய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு அரச உத்தியோகத்தரை மிரட்டியுள்ள்ளார்.

இந்தநிலையில், சம்பவம் குறித்து சிறிபுர காவல்நிலையத்தில் அரச உத்தியோகத்தர் முறைப்பாடு செய்துசெய்த நிலையில் , சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.