அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!!

 
செப்டெம்பர் மாதத்திற்குள் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொழில் வல்லுநர்கள் குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக சமன் ரத்னப்பிரிய கூறியுள்ளார்.


கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  சமன் ரத்னப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நேரத்தில் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் பலனில்லை.கிடைக்கும் போது நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளை அழைத்து 03 தடவைகள் விளக்கமளித்துள்ளார்.

மேலும் 6 மாத கால அவகாசம் கொடுங்கள். IMF கடனுக்கு காத்திருங்கள். ஜூலை, செப்டம்பரில் மறுபரிசீலனை செய்யப்படும். ஜூலைக்குள் மின்கட்டணத்தை குறைக்கலாம். உணவுப் பொருட்களின் விலையை குறைக்கலாம். வரிச்சலுகை கொடுக்கலாம். அதற்கான வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.