ஆலயத்தில் நள்ளிரவில் நடந்த அட்டகாசம்!

 


வரலாற்று பிரசித்தி பெற்ற அம்பாறை - நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று (31) நள்ளிரவில் புகுந்த யானைகள் ஆலத்தில் பாரிய சேதத்தை விளைவித்துள்ளன.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 5 யானைகள் ஆலய சுற்றுமதிலை உடைத்து ஆலய அலுவலக அறை, களஞ்சியசாலை என்பவற்றை முற்றாக உடைத்து சேதப்படுத்தின.

அத்துடன் களஞ்சியசாலையில் உள்ளிருந்த அரிசியை எடுத்ததுடன், நான்கு பக்கங்களிலும் தும்பிக்கையால் உடைத்து சேதப்படுத்தின.

அருகில் இருந்த பாரிய மாமரத்தின் கிளையை முறித்து எறிந்து சுமார் ஒரு மணி நேரம் அட்டகாசம் செய்தன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.