தேர்தல் திகதி குறித்து வெளியான அறிவிப்பு!

 


ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.


தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு நாடு வந்துள்ளதாக நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் தேர்தலுக்குத் தேவையான பணத்தைத் தடுப்பது முதன்மையான நடவடிக்கையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


அதன் மூலம் முழுத் தேர்தல் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த நாட்டில் தேர்தல்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்டோருக்கு ஏற்ற விதத்திலேயே நடத்தப்படுகின்றன என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்திருந்தார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.