திருகோணமலை Gunsite நிலக்கீழ் சித்திரவதைக்கூடம்.


அண்மையில் சிறிலங்காவிற்கு வந்திருந்த உலகச்சண்டியர் நாட்டின் படையதிகாரிகள் குழு திருகோணமலைக்கு இரகசியமாகச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. 


கடற்படை அதிகாரி அட்மிரல் வசந்த கரன்னகொட தலைமையில் இயங்கிய குழுவொன்று தமிழர்களைக் கடத்திவந்து இந்த நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தில் வைத்துப் படுகொலைசெய்திருந்தது. ஏறக்குறைய 180 குற்றப்பதிவுகள் இவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 40 இற்கு மேற்பட்ட பாலியல் வல்லுறவுக் கொலைகளும் அடங்கும். (காசுக்காகக் கொழும்பு போன்ற பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்டவர்களும் இதற்குள் அடங்கும்)


குறித்த நிலக்கீழ் சித்திரவதைக் கூடத்தின் பகுதிகள் இன்னமும் கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இனிவரும் காலங்களில் பிறநாடுகளில் இருந்து உலகச்சண்டியரால் கைதுசெய்யப்படும் கைதிகளைக் கொண்டுவந்து இங்கே அடைத்து சித்திரவதை செய்ய ஒத்திகை பார்க்கப்படுகிறதோ யாரறிவார் ? 


-தேவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.