கண்ணைமூடி நம்ப-நம்ம கன்னிப்பொண்ணுங்க...!

 


நாகரிகம்தான்

நமக்கு தொல்லை

காதுல கடுக்கன் போட்டு

கலர் கலரா முடியை விட்டு

கஞ்சா வியர் அடிச்சு

கடன்வாங்கி செலவழிச்சு


கண்டபடி பொய்சொல்லி

கட்டுக்கடங்கா பிள்ளையா

காலநேரம் பாக்காமா

கஸ்ர துன்பம் தெரியாம


காலமை தொடங்கி

கண்ணுறங்கும் வேளைவரை

காவாலியா திரியிறவனை

கண்ணைமூடி நம்ப-நம்ம

கன்னிப்பொண்ணுங்க தயார்.


தண்ணி அடிச்சவனும்

பொண்ணு பிடிச்சவனும்

நல்லாத்தான் வாழுறான்,

தாய்சொல்லு கேட்டு

தன்னடக்கத்தோடு வாழ்தவனை

யார் உயர்வா நினைக்கிறான்.


அமைதியா இருந்தா

ஆர்தான் பாக்குதுகள்

ஆர்பாட்டம் போட்டாத்தானே

ஆம்பிளை என்று நம்புதுகள்


கெட்டவனைத்தானே

கேள்சுக்கும் பிடிக்குது

துட்டனுகளைதானே-இந்த

பெட்டைகளும் விரும்புது


நல்வன் எண்டா

நக்கலாக இருக்குது

கள்ளனுகளுக்குதானே

காதலும் கைகூடுது


வேடிக்கை வாழ்க்கையை

விரும்பிற உலகத்தில

வேட்டியோடு போன

யார்மதிப்பான் றோட்டில


உண்மையான வாழ்க்கை

உருப்படாம போச்சு

தர்மம் என்ற சொல்லு

தலைகீழாப்போச்சு


வெட்டியா வாழ்வதே

கெட்டித்தனமாச்சு

தட்டிச்சுற்றி வாழ்வதே

நாகரிகமா போச்சு


பொறுப்பா வாழ்ந்து

வெறுத்துப் போச்சு

வெறுப்பான வாழ்க்கையே

விதியென்றாச்சு.


நல்லவனாக இருந்தும்

நன்மையேதும் இல்லை

நாகரிக வாழ்க்கையே

நமக்கு தருகிது தொல்லை.


த.யாளன்.

பிரான்ஸ்

30.04.2023

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.