பஞ்ச ஈச்சரனே ..!

 


பஞ்ச ஈச்சரனே...

கயிலாய மலையானே 

அஞ்சுவோர் நெஞ்சங்களில் நிறைந்த அருளானே...


பஞ்சம் போக்க வந்து

பிட்டுக்கு மண் சுமந்தாயே

தஞ்சம் அடைவாருன்னை 

பித்தனே நீ காப்பாயே...


கொஞ்சும் தமிழுனக்கு 

கோடி புகழ் வாழ்த்துமே 

கொக்கட்டிச் சோலையுந்தன் 

கொண்ட பிணி தீர்க்குமே...


ஆலகால விஷமுண்டு 

அண்டம் தனை காத்தாயே 

அம்பிகை பார்வதியை

அரைபாகமாய் கொண்டாயே...


உடுக்கை ஒலியெங்கும் 

உன்நாமம் பிறக்குமே 

உடம்பில் திருநீறும் 

பஞ்சாட்சரம் உரைக்குமே...


கங்கையைத் தலையோடு 

அங்கமாய்க் கொண்டாயே 

நங்கையே உனைப்பாடும் 

நமசிவாயனாய் நின்றாயே...


பலவினை தீர்த்தருளும் 

பாலாவி உறைந்தாயே 

பழமொன்றில் உலகென்று

பலர் நெஞ்சில் நின்றாயே...


சைவத்தின் முதற்பொருளே 

சத்திய கருப்பொருளே 

காண்பார் மனமெங்கும்

உதிக்கும் சிவவுருவே..


இரா.நிதன்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.