க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!


கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்தோடு உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இனியும் தாமதிக்கப்படாமல் விரைவில் ஆரம்பமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (25) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி மே மாதம் 29ஆம் திகதி நிச்சயம் இடம்பெறுமென கல்வி அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.