வெளிநாட்டிலிருந்து வீல்-சேரில் வந்த மகனை கண்டு கதறி அழுத தாய்!

 


வேலை நிமித்தம் காரணமாக வெளிநாடு ஒன்றிற்கு சென்ற மகன் அங்கு விபத்தில் சிக்கி ஆளே உருக்குலைந்த நிலையில் வருவதை கண்ட தயார் மகனை கட்டியணைத்து அழுத வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மத்திய கிழக்கு நாடான பஹ்ரேன் நாட்டிற்கு குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தனது தாயாரின் போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்பியுள்ளார்.

பொன்னமராபதி பெரியார் பகுதியை சேர்ந்த சுப்பையா அழகி தம்பதியரின் மகனான வீரபாண்டி கடந்த வருடம் ஜனவரி மாதம் பஹ்ரேன் நாட்டிற்கு சென்று சூப்பர் மாக்கெட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வாகன விபத்தில் சிக்கியதால் அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும், குறித்த விபத்தினால் எழுந்து நடக்க முடியாத அளவிலும் ஆட்களை அடையாளம் காண முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கும் தள்ளபட்டுள்ளார்.

இதையடுத்து தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் செஞ்சி மிஸ்தானுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறாக விபத்தில் சிக்கி ஆளே உருக்குலைந்த நிலையில் சென்னை விமானம் நிலையம் வந்த வீரபாண்டியை அவரது தாயார் ஓடிச் சென்று கண்ணீர் மல்கியபடி வரவேற்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகனிடம் சென்றவர் மகனது கையினை இறுக பிடித்து "அம்மாவை தெரிதா ஐயா? அழகி அம்மா வந்து இருக்கன், இனி பயப்பிடாத ராசா அம்மா பார்த்துப்பேன், எப்புடி அனுப்பி வைச்சேன் " என்று கூறி மகனை பிடித்து அழுத வார்த்தைகள் காண்போரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.