தமிழ் வைத்தியருக்கு அமெரிக்காவில் தண்டனை!!

 


இலங்கை வம்சாவழியான தமிழ் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவின் ஸ்டப்போட் நீதிமன்றில் உடல்நலப் பாதுகாப்பு மோசடிக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளிடம் இருந்து பணம் அறவிடவில்லை என்று தெரிவித்து அனந்தகுமார் தில்லைநாதன் என்ற இந்த மருத்துவர் உளவியல் சிகிச்சை சேவைகளுக்கான அரச மருத்துவ உதவி திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 840,000 டொலர்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளைச் சேர்ப்பதற்காக அவர் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு பணம் கொடுத்துள்ளார்.

அதேநேரம் அந்த நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை அவர் பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் தில்லைநாதன் உடல்நலப் பாதுகாப்பு மோசடி மற்றும் கூட்டாட்சி சுகாதாரத் திட்டங்களை மீறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நீதிமன்றில் முன்னிலையான அவரை சிறைத்தண்டனைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மேற்பார்வையில் இருக்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் அவர் 1.6 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டார்.

இதில் 500,000 டொலர்களை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.