ஹரக் கட்டா தொடர்பில் வெளியான தகவல்!!

 


டுபாயில் கைதாகி தற்போது சிஐடி விசாரணியில் உள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு டுபாயில் இருந்து மடகஸ்கருக்கு செல்வதற்காக விடுதலைப் புலிகள் தனி ஜெட் விமானத்தை வழங்கியதாக  குற்றப் புலனாய்வுத் துறையினர்  நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 விடுதலைபுகளின்  வலையமைப்பில் செயற்பட்ட ஹர்பி என்ற   நபர் விடுதலைப் புலிகளுக்கு பிரபுக்கள் கொலைகள் மற்றும் பிரபுக்கள் கொலைத் திட்டங்களுக்காக அந்த அமைப்புக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் தண்டிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நந்துன் சிந்தக என்ற ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்ஷித என்ற குடு சலிந்து ஆகியோர் மார்ச் 1 ஆம் திகதி டுபாயில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் மடகஸ்கருக்கு வந்த போது அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர், சிஐடியினரின் காவலில் வைக்கப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் போதைப்பொருள் பாவனை தொடர்பான அறிக்கையை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையின் மூலம் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து மடகாஸ்கருக்கு வந்த ஜெட் விமானம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும், ஹரக் கட்டா இரண்டு தடவைகளில் 645 கிலோ ஹெரோயின், 3 சட்டவிரோத துப்பாக்கிகள், 05 AK 47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை நாட்டின் பாதுகாப்பு தரப்பினரிடம் இந்திய அரசாங்கம் மேற்கொண்ட விசாரணையில், இது தொடர்பான போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் பிரதான சந்தேகநபர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இன்டர்போல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.