கொழும்பு - தாமரைக்கோபுரத்தில் சாகச விளையாட்டு!!

 


தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான "Skydiving" விளையாட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இலங்கைச் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான ஸ்கை டைவிங் இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்கை டைவிங் சாம்பியன்கள் அண்மையில் இலங்கை வருகை தந்து கண்காட்சி நிகழ்வாக முதல் முறையாக தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

 இது , சர்வதேச மட்டத்தில் இலங்கை மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.