வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

 


வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு வயல் காவலுக்கு சென்று இன்று (16-04-20223) காலை விடிந்தும் குறித்த இளைஞர் வீடு திரும்பாமையால் அவரது குடும்பத்தினர் குறித்த இளைஞரைத் தேடிச்சென்ற போது வயற் பகுதியில் இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் சடலத்தை மீட்டனர்.

சடலமாக மிட்கப்பட்டவர் புளியங்குளம் புதூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜெகநாதன் கேஜிதன் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் மூத்த சகோதரர் புதூர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் உழவு இயந்திரத்தில் கடக்கின்ற போது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புகையிரதத்தில் உழவு இயந்திரம் மோதி அவரது நண்பருடன் மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.