யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள் மீது நிதி மோசடி வழக்கு!! !

 


யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபையின் கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக வடமாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்ததுடன்  ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், பாடசாலையின் மலர் வெளியீடு ஒன்றுக்காக தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கு ஊடாக வெளிநாட்டவர்களிடமிருந்து பணத்தினைப் பெற்று மோசடி செய்ததாக வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிதி நிர்வாக முறைகள் விசாரிப்பதற்காக விசாரணைக்குழுவும்  ஊர்காவற்துறை பாடசாலை அதிபர் மீது விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உமாமகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.