யாழ் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் திருப்தியின்மை!!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா நிறைவடைந்தது.
யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுத் திருவிழா என்று பெயரில் குறித்த திருவிழா நடத்தப்பட்டிருந்த நிலையில், பாரம்பரியமான உணவுகள் சிலவற்றை மாத்திரமே அங்கு காணக்ககூடியதாக இருந்தது. எனவும்
அத்துடன் உணவுப் பொருட்கள் விலைக்கு விற்கப்பட்டு வர்த்தக சந்தைப் போன்று நடத்தப்பட்டிருந்தததாகவும் அங்கு சென்றிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
வியாபார நோக்குடன் பலவித உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை அங்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை