ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவிலான தொழில்வாய்ப்புகள்!!
இலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் பலவற்றை எட்ட முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், ஜப்பானில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்த உடன்பாடுகளை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.


இதன்படி, கட்டிட பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.