நாளை என்னாகும்? - கமலகண்ணன்!!
மேகத்தை உருவாக்கி
மழையாக்கும் மாமலையை
மோகத்தின் காரணமாய்
மலடாக்கிக் கொன்றோமே.
போகங்கள் பலதந்த
பொன்னான பூமியினைப்
பாகங்கள் என்றாக்கி
பலகூறாய் விற்றோமே.
போகங்கள் பெறுவதற்குப்
பாவங்கள் புரிந்தோமே,
சோகத்தில் நிற்கின்ற
சூழ்நிலையைப் பெற்றோமே.
வேகத்தில் வருகிறது
வெப்பத்தின் தாக்கமே,
தேகங்கள் பிணியாகித்
தகித்திடவே அழுதோமே,
காகத்தின் நிறமொத்த
கருமேகக் கூட்டமே,
தாகத்தின் வாட்டத்தை
தகர்த்தருள் தொழுவோமே...
ம.கமலக்கண்ணன்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை