சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்!!
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மண் பெற்றெடுத்த ஊடகவியலாளரான இவர், ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்தவர்.
இவர், நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்தும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தித்துறை மூலம் சர்வதேசமெங்கும் வெளிப்படுத்திவந்தார்.
தனது 76 வது வயதில் எம்மிடமிருந்து விடைபெற்றார் என்ற துயரமான செய்தியை வெளியிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது.
அன்னாரின் இழப்புக்கு எமது ஊடகத்துறை சார்பில் எமது ஆழ்ந்த அஞ்சலிகளைச் செலுத்துகிறோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை