ரஜினியை விமர்சித்த ரோஜா!!

 


மறைந்த என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசியது குறித்து ரஜினிகாந்தை விமர்சித்த ரோஜா உள்ளிட்ட கட்சியினருக்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.


ஆந்திராவில் மறைந்த முன்னணி நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ஆரின் 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சி கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது.


இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.


இது ஆந்திர அரசியலில் பேசுபொருள் ஆன நிலையில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா,


ரஜினி சார் பேசியது சிரிப்பாக இருக்கிறது என்றும், அவருக்கு ஆந்திர அரசியல் தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.


தெரியாது என்றால் சைலண்டா இருக்கனும்


அதனைத்தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 30) புதுச்சேரி திருக்காஞ்சியில் நடைபெற்ற புஷ்கரணி விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜா மீண்டும் ரஜினியைப் பற்றி காட்டமாகப் பேசினார்.


அப்போது அவர், “என்.டி.ஆரைக் கொலை பண்ணுவதற்கு யார் திட்டம் போட்டாரோ, அவரை நல்லவர் என்று சொன்னது மட்டும் இல்லாமல், மேலே இருந்து என்.டி.ஆர் ஆசீர்வாதம் பண்ணுவார் என்று ரஜினி சார் சொன்னது ரொம்பத் தப்பு.


ஆந்திரா அரசியல் பற்றி எதுவும் தெரியாமல், சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு போய், சாப்பிட்டு, அவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டை படிச்சிட்டு பேசுனது சரியல்ல. ரஜினி சார் உச்சத்தில் இருந்தார். ஆனால் இன்று ஜீரோ ஆயிட்டார்.


இனிமேலாவது எந்த ஒரு நடிகரும், இன்னொரு மாநிலத்துக்கு போகும்போது, அந்த மாநில அரசியல் குறித்து தெரிந்தால் பேச வேண்டும். இல்லையென்றால் சைலண்டாக, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கனும்.” என்று தெரிவித்தார்.


அவருடன் சேர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்.எஸ்.ஆர்.சி.பி.) மற்ற தலைவர்களும் சந்திரபாபு நாயுடுவை, ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


ட்விட்டரில் டிரெண்டிங்


இதனையடுத்து கோபமடைந்த ரஜினி ரசிகர்கள் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று #YSRCPApologizeRAJINI என்ற ஹேஷ்டேகை கடந்த 2 நாட்களாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.


இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வரும், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம்!


அவர், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அநாகரீகமாக விமர்சித்து வருகின்றனர். அவர் தனது அண்ணனின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று தனது உறவைப் பகிர்ந்து கொண்டார்.


சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் ரஜினி காந்த் போன்ற பழம்பெரும் ஆளுமை குறித்து ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்கள் கூறியுள்ள கேவலமான கருத்துகள் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.


ரஜினிகாந்த் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசின் போக்கை அவர் விமர்சிக்கவில்லை. யார் குறித்து தவறாக பேசவில்லை. அவர் தனது கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அவர் மீது அதீத ஆணவத்துடன் வீண் விமர்சனம் செய்வதை தெலுங்கு மக்கள் யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.


சிகரம் போன்ற ஆளுமை கொண்ட ரஜினியின் குணாதிசயத்தை உங்கள் கட்சி தலைவர்கள் விமர்சிப்பது வானத்தைப் பார்த்து எச்சில் துப்புவது போன்றது. வாய் கிழிய பேசும் தலைவர்களை ஜெகன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தாங்கள் பேசியதற்கு அவர்கள் ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்டு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.” என்று 


கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.